ADDED : அக் 07, 2011 02:17 AM
மதுரை:கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழுக்கூட்டம்
நடந்தது.மாநில தலைவராக நல்லசிவம், பொதுச் செயலாளராக செல்வராஜ், பொருளாளராக
ஜான்சாமுவேல் உட்பட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
18 ஆண்டுகளாக பதவி
உயர்வின்றி பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
வாரியத்திலிருந்து பிற துறைகளில் பணி அமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு பணி
பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில
துணைத் தலைவர் ஈஸ்வரன், இணைச் செயலாளர் சவுந்திரராஜன், அமைப்பு செயலாளர்
சுகுமார், துணைச் செயலாளர்கள் சக்திமுருகன், சுப்பிரமணியம், சுமதி
பங்கேற்றனர்.


