/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை?: எஸ்.ஐ., மீது ஐ.ஜி.,யிடம் புகார்பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை?: எஸ்.ஐ., மீது ஐ.ஜி.,யிடம் புகார்
பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை?: எஸ்.ஐ., மீது ஐ.ஜி.,யிடம் புகார்
பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை?: எஸ்.ஐ., மீது ஐ.ஜி.,யிடம் புகார்
பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை?: எஸ்.ஐ., மீது ஐ.ஜி.,யிடம் புகார்
மதுரை : ''விருதுநகர் மாவட்டம் ஏ.கல்லுப்பட்டியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் கார்த்திக்செல்வன், 18, அடித்துக் கொலை செய்யப்பட்டார்,'' என தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாஸிடம் தந்தை வேலுச்சாமி நேற்று புகார் செய்தார்.
புகாரில் தெரிவித்துள்ளதாவது : ஜூலை 31ல் தன்னை சிலர் தாக்கியதாக கூறி வீட்டிற்கு வந்த கார்த்திக்செல்வன், மறுநாள் அதிகாலை இறந்தார். இவர் கொலை செய்யப்பட்டதாக அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தேன். என்னிடம் வெற்று பேப்பர்களில் கையெழுத்து பெற்ற எஸ்.ஐ., கண்ணன், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்நிலையில், மகன் வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில், கடுமையாக தாக்கப்பட்டதால் வயிற்றுப்பகுதியில் ரத்தம் உறைந்து மூச்சுவிட முடியாமல் இறந்தது தெரிய வந்தது. உயர் அதிகாரியை கொண்டு இவ்வழக்கை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விருதுநகர் எஸ்.பி., நஜ்மல்ஹோடாவுக்கு ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டார்.


