/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் அக்.13,14ல் குண்டலினி தியான பயிற்சிமதுரையில் அக்.13,14ல் குண்டலினி தியான பயிற்சி
மதுரையில் அக்.13,14ல் குண்டலினி தியான பயிற்சி
மதுரையில் அக்.13,14ல் குண்டலினி தியான பயிற்சி
மதுரையில் அக்.13,14ல் குண்டலினி தியான பயிற்சி
ADDED : அக் 05, 2011 12:50 AM
மதுரை : மதுரை கிராண்ட் மாஸ்டர் பிராண சிகிச்சை மையம் சார்பில், இரு இருதயம், குண்டலினி சக்தி பெறும் தியானப் பயிற்சி, மதுரையில் அக்.,13, 14ல் நடக்கிறது.
இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் மாலதி கூறுகையில், ''எதிர்காலத்தை வடிவமைக்கும் வழிமுறைகள், குண்டலினி சக்தியை எழுப்புதல் மற்றும் 12வித தியான முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. குண்டலினி பயிற்சி, மூளைக்கு உரமிடுவதைப் போல, மனம் செழித்தோங்க உதவும். வாழ்வின் நோக்கத்தை புரிந்து கொள்ள உதவும். மேலும் எதிர்பார்ப்புகளால் உண்டான மன அழுத்தம் குறையும்,'' என்றார். பயிற்சி குறித்த இலவச ஆலோசனை, அக்.,8 மாலை 4 மணி, அக்.,9 மாலை 6 மணிக்கு நடக்குமிடம்: 672, 15வது கிழக்கு குறுக்குத் தெரு, அண்ணாநகர், மதுரை - 625 010. போன்: 98944 99988.


