சுங்குலு கமிட்டி அறிக்கையை ஆய்வு செய்ய அமைச்சரவை குழு நியமித்தார் மன்மோகன்
சுங்குலு கமிட்டி அறிக்கையை ஆய்வு செய்ய அமைச்சரவை குழு நியமித்தார் மன்மோகன்
சுங்குலு கமிட்டி அறிக்கையை ஆய்வு செய்ய அமைச்சரவை குழு நியமித்தார் மன்மோகன்

புதுடில்லி : காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பாக, சுங்குலு கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்வதற்காக, மத்திய அமைச்சரவை குழுவை நியமித்து, பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.
டில்லி, காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பாக ஆய்வு செய்ய, மத்திய அரசின் முன்னாள் கணக்கு தணிக்கை ஜெனரல் வி.கே.சுங்குலு தலைமையில், உயர்மட்ட கமிட்டியை, பிரதமர் மன்மோகன் சிங் நியமித்திருந்தார்.
இந்த அமைச்சரவை குழுவின் தலைவராக, ராணுவ அமைச்சர் அந்தோணி இருப்பார். இவரைத் தவிர, மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், கபில் சிபல், ஆனந்த் சர்மா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, சிறப்பு அழைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுங்குலு கமிட்டியின் பரிந்துரைகள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், எதிர்காலத்தில், காமன்வெல்த் போட்டி போன்ற, மிகப் பெரிய போட்டிகள் நடக்கும்போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, அமைச்சரவை குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


