மாங்குரோவ் காடுகளை அதிகரிக்க குஜராத் திட்டம்
மாங்குரோவ் காடுகளை அதிகரிக்க குஜராத் திட்டம்
மாங்குரோவ் காடுகளை அதிகரிக்க குஜராத் திட்டம்
ADDED : ஆக 22, 2011 01:00 PM
ஆமதாபாத்: குஜராத் கடற்கரையில் கூடுதலாக 120 கி.மீ., அளவிற்கு மாங்குரோவ் காடுகளை வளர்க்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே. நந்தா கூறுகையில், குஜராத் மாநில கடற்கரைப்பகுதிகளில் தற்போதுள்ள 1080 ச. கி.மீ., பரப்பளவுள்ள மாங்குரோவ் காடுகளை 1200 ச. கி.மீ., ஆக அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மாநிலத்தின் 1600 கி.மீ., கடற்கரைப்பகுதியில் இந்த காடுகள் உருவாக்கப்படவுள்ளன.