Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தேயிலை தோட்டத்தை சீரமைக்க முடிவு

தேயிலை தோட்டத்தை சீரமைக்க முடிவு

தேயிலை தோட்டத்தை சீரமைக்க முடிவு

தேயிலை தோட்டத்தை சீரமைக்க முடிவு

ADDED : ஆக 26, 2011 12:09 AM


Google News
மஞ்சூர் : எடக்காடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு சொந்தமான 5 ஏக்கர் தேயிலை தோட்டத்தை சீரமைக்க மகாசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மஞ்சூர் அடுத்துள்ள எடக்காடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் மகாசபை கூட்டம் தொழிற்சாலை வளாகத்தில் நடந்தது. தொழிற்சாலை தனி அலுவலர் இந்திரா வரவேற்றார். தாத்தாகவுடர், செவனாகவுடர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், காந்திகண்டியில் புதிய கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை அமைப்பதில் ஒட்டுமொத்த அங்கத்தினர்களுக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை; 2009-10 வரவு செலவுகளை பரிசீலித்து அங்கீகரிப்பது. இறந்த அங்கத்தினர்களின் வாரிசுகளை அங்கத்தினர்களாக சேர்த்தல், தொழிற்சாலைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை சீரமைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாய சங்க தலைவர் சகாதேவன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us