/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பணியின் போது இறந்தவர் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை வழங்கியதுபணியின் போது இறந்தவர் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை வழங்கியது
பணியின் போது இறந்தவர் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை வழங்கியது
பணியின் போது இறந்தவர் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை வழங்கியது
பணியின் போது இறந்தவர் குடும்பத்திற்கு இ.எஸ்.ஐ., உதவித்தொகை வழங்கியது
ADDED : ஆக 25, 2011 01:58 AM
புதுச்சேரி : பணியின்போது உயிரிழந்த மில் தொழிலாளியின் குடும்பத்திற்கு, இ.எஸ்.ஐ., சார்பில் மாதாந்திர சார்ந்தோர் உதவித் தொகை, ஈமச்சடங்குத் தொகை வழங்கப்பட்டது.
புதுச்சேரி தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக மண்டல இயக்குனர் மீரான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏ.எப்.டி., மில்லில் பணியாற்றிய சந்திரசேகரன், ஜூலை 30ம் தேதி பணியிலிருந்த போது, மில் வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். அவர், இ.எஸ்.ஐ., காப்பீடு பெற்றவர் என்பதால், ஈமச்சடங்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
மேலும், அவர் பணி சார்ந்த விபத்தில் மரணம் அடைந்ததால், சார்ந்தோருக்கான உதவி பெறும் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகையாக அவரது மனைவிக்கு மாதம் ரூ.7668 வீதம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
இதுதவிர, அவரது மகனுக்கு மாதாந்திர சார்ந்தோர் உதவித் தொகையாக ரூ.5112 அவரது 25 வயது பூர்த்தியடையும் வரை வழங்கப்படும். மேற்கண்ட இந்த உதவித் தொகையின் முதல் தவணை, கடந்த 17ம் தேதி வழங்கப்பட்டது. பணி சார்ந்த விபத்தின் மரணம் காரணமாக தொழிலாளியின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இறுதி சடங்கு செலவுத் தொகை, சார்ந்தோர் உதவித் தொகை ஆகியவை, மரணம் ஏற்பட்ட 18 நாட்களுக்குள் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


