/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மாநகர மேயர் பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி அதிமுகவில் போட்டோ போட்டிநெல்லை மாநகர மேயர் பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி அதிமுகவில் போட்டோ போட்டி
நெல்லை மாநகர மேயர் பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி அதிமுகவில் போட்டோ போட்டி
நெல்லை மாநகர மேயர் பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி அதிமுகவில் போட்டோ போட்டி
நெல்லை மாநகர மேயர் பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி அதிமுகவில் போட்டோ போட்டி
ADDED : செப் 03, 2011 02:47 AM
திருநெல்வேலி:நெல்லை மாநகர மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட 4
பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளிலேயே இப்பதவிக்கு
அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் கட்சியினரிடையே பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட
விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் நேற்று முதல்
பெறப்பட்டது. வரும் 8ம் தேதி வரை விருப்ப மனுக்கள் அதிமுக கட்சி
அலுவலகத்தில் பெறப்படுகிறது. இதன் பொறுப்பாளராக தமிழ்மகன் உசேன் நியமனம்
செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர மேயர் பதவிக்கு 25 ஆயிரம் ரூபாயும்,
மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், டவுன் பஞ்.,தலைவர்
பதவிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், டவுன் பஞ்,.கவுன்சிலர் பதவிக்கு 500
ரூபாயும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாயும், மாவட்ட
கவுன்சிலர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய் என கட்டணம்
அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் நாளான நேற்று கட்சி அலுவலகத்தில் மேயர்
பதவிக்கு ஆர்.பி.,ஆதித்தன், பழனி, பால்கண்ணன், ஆதம் ஆகிய 4 பேர் விருப்ப
மனு அளித்தனர். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 49 பேரும்,டவுன்
பஞ்.,கவுன்சிலர் பதவிக்கு 4 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 15 பேரும்,
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
டவுன்
பஞ்,.தலைவர் பதவிக்கு மட்டும் ஒருவர் கூட விருப்ப மனு செய்யவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.முதல் நாளிலேயே உள்ளாட்சி தேர்தலில் மற்ற பதவிகளுக்கு
போட்டியிட அதிமுகவினரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நேற்று சுப
முகூர்த்தநாள் என்பதால் அதிமுகவினர் விருப்ப மனு அளிக்க போட்டோ போட்டி
போட்டனர். இதனால் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குறிப்பாக மாநகர மேயர் பதவிக்கு 20க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு
அளிப்பார்கள் என தெரிகிறது. இதனால் மேயர் பதவிக்கு மட்டும் அதிமுகவில்
கடும் போட்டி ஏற்படும் என அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநகர
கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் துணை மேயர் பதவியை கைப்பற்றலாம்
என்ற முனைப்போடு கவுன்சிலர் பதவிக்கும் ஏராளமானோர் குறிவைத்துள்ளனர் எனவும்
தெரிவிக்கப்பட்டது.


