/உள்ளூர் செய்திகள்/மதுரை/வீட்டுமனைபட்டா, சமுதாயகூடம் பா.ஜ., வேட்பாளர் கார்த்திக்பிரபுவீட்டுமனைபட்டா, சமுதாயகூடம் பா.ஜ., வேட்பாளர் கார்த்திக்பிரபு
வீட்டுமனைபட்டா, சமுதாயகூடம் பா.ஜ., வேட்பாளர் கார்த்திக்பிரபு
வீட்டுமனைபட்டா, சமுதாயகூடம் பா.ஜ., வேட்பாளர் கார்த்திக்பிரபு
வீட்டுமனைபட்டா, சமுதாயகூடம் பா.ஜ., வேட்பாளர் கார்த்திக்பிரபு
ADDED : அக் 06, 2011 04:13 AM
மதுரை : ''மதுரை மாநகராட்சி17வது வார்டில் சமுதாய கூடம், நிரந்தர இலவச
வீட்டுமனை பட்டா, வீட்டுக்கு ஒரு மரம் உட்பட அடிப்படை வசதிகளை செய்து
கொடுப்பேன்,'' என பா.ஜ., வேட்பாளர் எம்.கார்த்திக்பிரபு உறுதி கூறினார்.
பா.ஜ., நகர் தொழில் வர்த்தக பிரிவு தலைவர் மற்றும் மத்திய தொகுதி
பொறுப்பாளராகவுள்ள எம்.கார்த்திக்பிரபு கூறியதாவது: போடி லைன்
பகுதியினருக்கு பட்டா, குளியலறை, கழிப்பறை, சலவைக்கூடம், குடிநீர் குழாய்,
மழைநீர் சேகரிப்பு, கழிவு நீர் வெளியேறும் வசதி போன்றவை உடனடியாக
செய்யப்படும். வார்டில் நிரந்தர தினசரி மார்க்கெட், பொது நூலகம்
அமைக்கப்படும். ஏழை மாணவர்கள் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெற மையம்
திறக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தால் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில்
அரசு பள்ளி அமைக்கப்படும். ஒரே மின்வசூல் மையம் அமைக்கப்படும். வீட்டுக்கு
ஒரு மரக்கன்றுகளை வழங்கி பசுமை பகுதியாக மாற்றப்படும். கூடுதல் துப்பரவு
பணியாளர்களை நியமித்து வார்டில் சேரும் குப்பைகள் உடனுக்குடன்
அகற்றப்படும். 24 மணி நேரம் செயல்படும் தனி அலுவலகம் ஏற்படுத்தி, குறைகளை
நிவர்த்தி செய்வேன். குறைகளை 98421 55525 என்ற மொபைல் போனில்
தெரிவிக்கலாம், என்றார்.


