/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் "ஆசை'வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் "ஆசை'
வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் "ஆசை'
வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் "ஆசை'
வெளிப்படையான இடமாறுதல் கவுன்சிலிங் முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் "ஆசை'
ADDED : ஆக 30, 2011 12:07 AM
திருநெல்வேலி : வெளிப்படையான நேர்மையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று முதுகலை ஆசிரியர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக நெல்லை கல்வி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தேர்தல் ஆணையாளராக மாவட்ட தலைவர் சேதுராஜ் செயல்பட்டார். மாவட்ட செயலாளர் மனோகரன், பொருளாளர் பரதாழ்வார், அமைப்பு செயலாளர் மாரியப்பன், மாநில துணைத் தலைவர் அய்யாதுரை முன்னிலை வகித்தனர்.
இதில் நெல்லை கல்வி மாவட்ட தலைவராக சீனி (திருவேங்கடம் பள்ளி), செயலாளராக முத்துப்பாண்டி (கரிவலம்வந்தநல்லூர் பள்ளி), பொருளாளராக ஜான்சன் கால்டுவெல் (உக்கிரன்கோட்டை பள்ளி), துணைத் தலைவராக சாத்ராக் ஞானதாஸ் (பாளை ஜான்ஸ் பள்ளி), இணை செயலாளராக ரங்கநாதன் (சங்கர் நகர் பள்ளி), மகளிர் பிரிவு செயலாளராக கனகவல்லி (பர்கிட்மாநகர் பள்ளி), செயற்குழு உறுப்பினர்களாக சீவலமுத்து, கார்த்திகேயன், ஜமுனா ராணி, அருள்தாஸ் ஜெபக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை பாராட்டி மாவட்ட தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் ஜிம்சன் உட்பட பலர் பாராட்டி வாழ்த்தினர். வெளிப்படையான நேர்மையான ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த வேண்டும். பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தி தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கு வரலாறு புத்தகங்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சேரன்மகாதேவி கல்வி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் வரும் 3ம் தேதி பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் தேர்தலும் நடக்கிறது. தேர்தல் ஆணையர்களாக மாநில தலைவர் சுப்பையா, மாநில பொது செயலாளர் விஜயகுமார் செயல்படுகின்றனர். இதில் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளை சேர்ந்த முதுகலை ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


