/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குண்டாறு அணையில் சுற்றுலா பயணி செயின் "அபேஸ்' : வாலிபர் கைதுகுண்டாறு அணையில் சுற்றுலா பயணி செயின் "அபேஸ்' : வாலிபர் கைது
குண்டாறு அணையில் சுற்றுலா பயணி செயின் "அபேஸ்' : வாலிபர் கைது
குண்டாறு அணையில் சுற்றுலா பயணி செயின் "அபேஸ்' : வாலிபர் கைது
குண்டாறு அணையில் சுற்றுலா பயணி செயின் "அபேஸ்' : வாலிபர் கைது
ADDED : ஆக 09, 2011 02:29 AM
தென்காசி : செங்கோட்டை குண்டாறு அணையில் சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணியிடம் தங்க செயினை பறித்த தூத்துக்குடி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குற்றாலத்தில் சீசன் அருமையாக இருப்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் செங்கோட்டை குண்டாறு, கேரள மாநிலம் பாலருவி, மணலாறு அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். இதேபோன்று சென்னை மணலி 3வது தெருவை சேர்ந்த காளீஸ்வரன் (30) என்பவர் தனது நண்பர்களுடன் குற்றாலம் வந்தார். அவர் தனது நண்பர்களுடன் அருவிகளில் குளித்து விட்டு செங்கோட்டை குண்டாறு அணைக்கு சென்றார்.அங்கு காளீஸ்வரன் குளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென காளீஸ்வரன் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். ஆனால் காளீஸ்வரன் தனது நண்பர்கள் மற்றும் இதர சுற்றுலா பயணிகளின் துணையோடு செயினை பறித்து ஓட்டம் பிடித்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தார். பிடிபட்ட நபர் தூத்துக்குடி கார்டுவெல் காலனியை சேர்ந்த குமார் (30) என தெரிய வந்தது.இதுபற்றி காளீஸ்வரன் செங்கோட்டை போலீசில் புகார் செய்து குமாரை ஒப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரிமுத்து செயினை பறித்த குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


