/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் அன்பழகன் ஆஜராக உத்தரவுதிருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் அன்பழகன் ஆஜராக உத்தரவு
திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் அன்பழகன் ஆஜராக உத்தரவு
திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் அன்பழகன் ஆஜராக உத்தரவு
திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் அன்பழகன் ஆஜராக உத்தரவு
ADDED : ஆக 12, 2011 11:34 PM
உடுமலை : காகித ஆலை மோசடி வழக்கில், ஐகோர்ட் மறு உத்தரவு அளிக்கும்
வரை,மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக எம்.எல்.ஏ., அன்பழகனுக்கு
மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
உடுமலையை சேர்ந்த சீனிவாசன் தனக்கு சொந்தமான
காகித ஆலையை திருவல்லிக்கேணி தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் உட்பட 8 பேர்
மிரட்டி பறித்து கொண்டதாக, திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில்
புகார் அளித்தார். எம்.எல்.ஏ., அன்பழகன் கடந்த 29ம் தேதி மாவட்ட
குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆக., 3ல் அன்பழகன் தாக்கல்
செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் 15 நாள்
நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்நிலையில், ஜாமின்
கோரி சென்னை ஐகோர்ட்டில் அன்பழகன் தாக்கல் செய்திருந்தார். கடந்த 10ம் தேதி
நடந்த விசாரணையில், அன்பழகனுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி ராஜசூர்யா
உத்தரவிட்டார். மூன்று நாட்களுக்கு திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில்
ஆஜராகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஐகோர்ட் ஜாமின்
உத்தரவை ஜே.எம்.1., கோர்ட்டில் சமர்ப்பிக்க நேற்று பலத்த போலீஸ்
பாதுகாப்புடன் காலை 11.45 மணிக்கு உடுமலைக்கு அழைத்து வரப்பட்டார். உத்தரவு
ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 'எம்.எல்.ஏ.,
அன்பழகன் மூன்று நாட்கள் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி
விசாணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வரும் 16ம் தேதி முதல் ஐகோர்ட் மறு
உத்தரவு வழங்கும் வரை, குற்றப்பிரிவு போலீசில் காலை 8.00 மணிக்கு ஆஜராகி
மாலை 5.00 மணி வரை இருக்க வேண்டும்' என, மாஜிஸ்திரேட் தீபா உத்தரவிட்டார்.


