Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோ ஆப்டெக்ஸ் ஆலோசகர்களாக மாறும் மாணவிகள்

கோ ஆப்டெக்ஸ் ஆலோசகர்களாக மாறும் மாணவிகள்

கோ ஆப்டெக்ஸ் ஆலோசகர்களாக மாறும் மாணவிகள்

கோ ஆப்டெக்ஸ் ஆலோசகர்களாக மாறும் மாணவிகள்

ADDED : ஜூலை 13, 2011 05:12 PM


Google News
Latest Tamil News

சென்னை: கோ ஆப்டெக்சின் தரத்தை உயர்த்துவதற்காக அனைத்து தரப்பினரின் ஆலோசனையையும் கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது.

கோ ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் சி.உமாசங்கர் இது குறித்து கூறுகையில், சென்னை பாந்தியன் சாலையில் உள்ள கோ ஆப்டெக்ஸ் ÷ஷாரூமுக்கு புதிய ரகங்கள் வந்துள்ளன. இதைப் பார்வையிட்டு தரம் நிர்ணயிக்குமாறு எத்திராஜ் மற்றும் காயிதே மில்லத் அழைத்தோம். அவர்கள் சுமார் 3 ஆயிரத்து 500 சேலைகள் குறித்து சேலையின் ரகம், டிசைன் மற்றும் விலை அடிப்படையில் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு இந்த பணிக்காக கவுரவ ஊதியமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அடுத்து வேலைக்குச் செல்லும் மற்றும் குடும்ப பெண்களையும் அழைக்க இருக்கிறோம். இதன் மூலம் அவர்கள் அளிக்கும் கருத்துக்கள் அடிப்டையில், அவற்றின் தரம், டிசைன் மற்றும் விலையை நிர்ணயித்து அதிக ஆதரவு பெற்ற ரகங்களை அதிக அளவில் வரவழைக்க இருக்கிறோம். இவற்றுக்கு ஏற்கனவே விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த மதிப்பீட்டாளர்கள் விலை அதிகம் என கருத்து தெரிவித்தால் அது மாற்றி அமைக்கப்படும். அதே நேரத்தில் ஒரு சேலை அழகாக இருக்கிறது; ஆனால் விலை அதிகம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டால், அத்தகைய ரகங்களை, கூடுதலாக விற்பனை நடைபெறும் மையங்களில் மட்டும் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us