ADDED : செப் 27, 2011 11:26 PM
சென்னை: சென்னை மேயர் பதவிக்கு 10 பேரும், கவுன்சிலர் பதவிகளுக்கு 671 பேரும், நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத் தாக்கல், கடந்த 22ம் தேதி துவங்கியது. இதுவரை, சென்னை மேயர் பதவிக்கு 17 பேரும், 200 வார்டுகளுக்கு 666 பேரும், வேட்பு மனு செய்தனர். வேட்பு மனுத் தாக்கலுக்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால், வேட்பு மனு செய்பவர்களின் எண்ணிக்கை, இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


