/உள்ளூர் செய்திகள்/சேலம்/தென் மண்டல தேக்வாண்டோ சேலம் சாய் விடுதி சாம்பியன்தென் மண்டல தேக்வாண்டோ சேலம் சாய் விடுதி சாம்பியன்
தென் மண்டல தேக்வாண்டோ சேலம் சாய் விடுதி சாம்பியன்
தென் மண்டல தேக்வாண்டோ சேலம் சாய் விடுதி சாம்பியன்
தென் மண்டல தேக்வாண்டோ சேலம் சாய் விடுதி சாம்பியன்
சேலம்: தென் மண்டல அளவிலான தேக்வாண்டோ போட்டியில், சேலம் சாய் விடுதி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில், சேலம் சாய் விளையாட்டு விடுதியை சேர்ந்த விஜய், பெண்கள் பிரிவில் பெங்களூருவை சேர்ந்த லிகிதா ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஜூனியர் ஆண்கள் பிரிவில், ஆந்திராவை சேர்ந்த முகமது அக்தர், பெண்கள் பிரிவில் அத்திரா ஆகியோர் சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். சீனியர் ஆண்கள் பிரிவில், சேலத்தை சேர்ந்த கார்த்திக், பெண்கள் பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த அம்பிகாபிகே ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மோகன்ராஜ் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் ஜான்ஜோசப், தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க துணை தலைவர் விவேக் ஆனந்த், பொது செயலாளர் செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


