Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சூலூர் ஒன்றியத்தில் ஒரு பேரூராட்சி 17 ஊராட்சிகளில் வார்டுகள் அதிகரிப்பு

சூலூர் ஒன்றியத்தில் ஒரு பேரூராட்சி 17 ஊராட்சிகளில் வார்டுகள் அதிகரிப்பு

சூலூர் ஒன்றியத்தில் ஒரு பேரூராட்சி 17 ஊராட்சிகளில் வார்டுகள் அதிகரிப்பு

சூலூர் ஒன்றியத்தில் ஒரு பேரூராட்சி 17 ஊராட்சிகளில் வார்டுகள் அதிகரிப்பு

ADDED : ஜூலை 25, 2011 01:55 AM


Google News

சூலூர் : சூலூர் ஒன்றியத்தில் கருமத்தம்பட்டி பேரூராட்சியில் வார்டு எண்ணிக்கை 18லிருந்து 21 ஆக உயருகிறது.

மேலும், 17 கிராம ஊராட்சிகளில் வார்டு எண்ணிக்கை 67ல் இருந்து 171 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கின்றன. பல ஊராட்சிகளில் ஒரே வார்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சிப்பணிகளை முறையாக செய்யவும், 'வார்டுக்கு ஒரு உறுப்பினர்' என்ற முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.



அதன் அடிப்படையில், 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி, பல உறுப்பினர் கொண்ட வார்டுகளை ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றம் செய்யும் பணி சூலூர் ஒன்றியத்தில் நடந்தது. ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 17 கிராம ஊராட்சிகளில், 2000 வரை மக்கள் தொகை உள்ள ஊராட்சியில் ஆறு உறுப்பினர், 6000 வரை மக்கள்தொகை உள்ள ஊராட்சியில் ஒன்பது உறுப்பினர், 10 ஆயிரம் வரை மக்கள் தொகை உள்ள ஊராட்சியில் 12 உறுப்பினர் கொண்ட வார்டாக மாற்றப்பட்டு, அதற்கேற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.பட்டணம், காடாம்பாடி, முத்துக்கவுண்டன்புதூர், நீலம்பூர், சின்னியம்பாளையம், அரசூர் கணியூர் உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளில் வார்டு எண்ணிக்கை நான்கிலிருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



செம்மாண்டாம்பாளையம், கிட்டாம்பாளையம், காடுவெட்டிபாளையம், பதுவம்பள்ளி, பீடம்பள்ளி, கலங்கல், காங்கயம்பாளையம், ராசிபாளையம், கரவளிமாதப்பூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் வார்டு எண்ணிக்கை நான்கிலிருந்து ஒன்பதாக உயருகிறது. மயிலம்பட்டி ஊராட்சியில் மட்டும் வார்டு எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயருகிறது.கருமத்தம்பட்டி பேரூராட்சி: சூலூர் ஒன்றியத்தில் இருகூர், பள்ளபாளையம், சூலூர், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி, மோப்பிரிபாளையம் உள்ளிட்ட ஆறு பேரூராட்சிகள் உள்ளன. இதில் பள்ளபாளையம், கண்ணம்பாளையம், மோப்பிரிபாளையத்தில் தலா 15 வார்டுகளும், இருகூர் மற்றும் சூலூரில் தலா 18 வார்டுகள் உள்ளன. கருமத்தம்பட்டி தவிர்த்து, மற்ற பேரூராட்சிகளில் வார்டு எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. கருமத்தம்பட்டி பேரூராட்சியில் மட்டும் வார்டு எண்ணிக்கை 18லிருந்து 21 ஆக உயருகிறது. ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட கவுன்சிலர் எல்லையில் எந்த மாற்றமும் இல்லை. பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் வார்டு எண்ணிக்கை அதிகரிப்பால், அரசியல் கட்சியினர் மகிழ்ச்சியடைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us