/உள்ளூர் செய்திகள்/கரூர்/லாலாப்பேட்டை, க.பரமத்தியில் கிராமசபை கூட்டம்லாலாப்பேட்டை, க.பரமத்தியில் கிராமசபை கூட்டம்
லாலாப்பேட்டை, க.பரமத்தியில் கிராமசபை கூட்டம்
லாலாப்பேட்டை, க.பரமத்தியில் கிராமசபை கூட்டம்
லாலாப்பேட்டை, க.பரமத்தியில் கிராமசபை கூட்டம்
ADDED : ஜூலை 26, 2011 12:45 AM
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள கருப்பத்தூர் வேங்காம்பட்டி பஞ்சாயத் து அலுவலக வளாகத்தில் சிறப் பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.
பஞ்சாயத்து தலைவர் சங்கப்பிள்ளை தலைமை வகித்தார். துணை தலைவர் மருதமுத்து முன்னிலை வகித்தார். எழுத்தர் சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றார். பஞ்சாயத்து மூலம் செ யல்படும் மகாத்மா காந்தி தேசி ய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் செயல்படும் பணிகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. கருப்பத்தூர் பஞ்சாயத் து கவுன்சிலர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் பங்கேற்றனர். * க.பரமத்தி யூனியன் பகுதியில் உள்ள 30 பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது. குப்பம் பஞ்சாயத்து கிராம சபைக்கூட்டம் குப்பத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் பாப்பாயி மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து அஞ்சூர், பி.அணைப்பாளையம், ஆரியூர், கூடலூர் கிழக்கு மற்றும் மேற்கு, கார்வழி, காருடையாம்பாளையம், கோடந்தூர், மொஞ்சனூர், முன்னூர், நஞ்சைக்காளிக்குறிச்சி, நடந்தை, நெடுங்கூர், பவித்திரம், க.பரமத்தி, புஞ்சைக்காளிக்குறிச்சி, சூடாமணி, ராஜபுரம், துக்காட்சி உள்ளிட்ட முப்பது பஞ்சாயத்துகளிலும் கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில், பி.டி.ஓ., க்கள் பன்னீர்செல்வம், வீரமலை (பஞ்சாயத்து) ஏ.பி.டி.ஓ.,கள் மாதவன், கிருஷ்ணமூர்த்தி, சுதர்சனம், சேகர் பங்கேற்றனர்.