/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., ஆர்வம்உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., ஆர்வம்
உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., ஆர்வம்
உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., ஆர்வம்
உள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., ஆர்வம்
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
பொள்ளாச்சி : 'உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து பகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும்' என, தே.மு.தி.க., செயல்வீரர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் தெற்கு ஒன்றிய தலைவர் பாலு தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., கூட்டணிக்கு ஓட்டளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆக., 25ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை கட்சியின் வெற்றி விழாவாகவும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகவும் கொண்டாட வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்து, பழைய உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடும் இடங்களிலும், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் இடங்களிலும் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.