/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முகாம் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க உத்தரவுமுகாம் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க உத்தரவு
முகாம் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க உத்தரவு
முகாம் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க உத்தரவு
முகாம் இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க உத்தரவு
ADDED : செப் 17, 2011 09:50 PM
சிவகங்கை : தமிழக அரசு பொது மக்களுக்கு வழங்கி வரும் நலத்திட்டங்களை இலங்கை தமிழர்களுக்கும் தொடர்ந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டதின் கீழ் ஆதரவற்ற முதியோர்,விதவையர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. திருமண உதவி திட்டத்தின் கீழ் டிப்ளமோ, பட்டம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவி தொகை 50 ஆயிரம்,4 கிராம் தங்கம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரொக்கம், 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வைப்பு நிதியும் வழங்கப்படுகிறது. தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. பட்டதாரிகளில்லா குடும்பங்களில் ஒற்றை சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. பாலிடெக்னிக் முடித்து இரண்டாம் ஆண்டுபிஇ/ பி டெக் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் பொது பிரிவின் கீழ் தர வரிசையின் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 20 கிலோ இலவச அரிசி, கோதுமை மாவு, பாமாயில், பருப்பு வகைகள், ரவை உள்ளிட்டவை நியாய விலை கடைகளில் கிடைக்கும். இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் இத்திட்டங்களில் பயன் அடையலாம் என கலெக்டர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.