Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அனைத்து தொழில் வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

அனைத்து தொழில் வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

அனைத்து தொழில் வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

அனைத்து தொழில் வணிகர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ADDED : அக் 11, 2011 02:34 AM


Google News
ஈரோடு : ஈரோட்டில் அமைக்க திட்டமிட்டுள்ள 'டி' வடிவ பாலத்துக்கு அனைத்து வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பு தலைவர் சிவனேசன், ஈரோடு கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியதாவது: ஈரோடு காந்திஜி சாலையில் இருந்து பிரப் ரோடு வரை 11 மீட்டர் அகலம், மொத்த அகலம் 12 மீட்டராகவும், மொத்த நீளம் 608.913 மீட்டராகவும், பிரிவு மேம்பாலத்தில் காச்சேரி ரோடு நோக்கி 7.5 மீட்டர் அகலம், மொத்த அகலம் 8.5 மீட்டரிலும், மொத்த நீளம் 219.859 மீட்டராகவும் 'டி' வடிவில் 828.772 மீட்டரில் இரட்டை தூண்களுக்குப்பதில் ஒற்றை தூண் வடிவில் மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை திட்டமிட்டுள்ளது.இந்த அகலத்தில் இரண்டு வாகனங்கள் கூட சுலபமாக கடக்க முடியாது.

பாலத்தின் கீழ் இருபுறமும் சேவை ரோடுக்கான வசதியில்லை. கச்சேரி வீதியில் இருந்து வரும் வாகனங்கள் பெரும்பாலும், பிரப் ரோட்டின் இடைப்பகுதியில் உள்ள ரோட்டில் திரும்புவதாகவே உள்ளன. பிரப் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பார்க்கில் இருந்து கனி மார்க்கெட் பகுதிக்கு செல்ல இயலாது. கச்சேரி வீதியில் இருந்து இடதுபுறம் எஸ்.பி., அலுவலக ரோட்டுக்கு திரும்பும் வாகனங்கள், பாலத்தின் மேல் ஏறிச் செல்ல இயலாது; காளை மாட்டு சிலை வரை சென்று மறுபடியும் சுற்றி வர வேண்டும்.பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் போக்குவரத்து சீர் கெடும்; விழா நடத்த முடியாது. அங்குள்ள வணிக நிறுவனங்கள், வளாகங்கள் தேவையின்றி இடிக்க நேரிடும். 'எல்' வடிவ மேம்பாலம் கட்டும்போது மின்கம்பம், தண்ணீர் குழாய், கேபிள்களை மாற்ற 3.30 கோடி ரூபாய் தேவைப்படும் என்ற நிலையில், 'டி' வடிவ மேம்பாலம் கட்ட ஐந்து கோடி ரூபாய் அளவு தேவைப்படும்.புறவழிச்சாலை வந்தால், நகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகமும் ஆயுதப்படை மைதானத்துக்கு சென்றுவிட்டால், போக்குவரத்து நெரிசல் குறையும். கனி மார்க்கெட் சாலையோர கடைகள் முற்றிலும் அப்புறப்படுத்தப்படும் போது நெரிசல் சீராகிவிடும். 80 அடி சாலையை திறந்தாலே மொத்த போக்குவரத்து நெரிசலும் தீர்ந்துவிடும்.ஈரோடு மக்களால் புறக்கணிக்கப்பட்ட 'எல்' மற்றும் 'டி' வடிவ மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் தீராது. இத்திட்டத்துக்கான 12.95 கோடி ரூபாய் மூலம், எம்.ஜி.ஆர்., சிலை அருகே மேம்பாலம் அமைக்கலாம். 80 அடி சாலையை உடனடியாக திறக்க வேண்டும். மாரியம்மன் கோவில் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை, அரசு கையகப்படுத்தி, அங்கு நகரின் முக்கிய உள்கட்டமைப்புடன் வணிக வளாகம், டி.ஐ.ஜி., அலுவலகம், பெரிய மாரியம்மன் கோவிலுக்கான வாகன நிறுத்தம் போன்ற வசதிகளை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர்., சிலை அருகே ரவுண்டானா அமைத்து, பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, மேட்டூர் ரோட்டின் போக்குவரத்தை சீரமைக்க வேண்டும், என்பது மக்களின் எதிர்பார்ப்பு.இவ்வாறு அவர் யோசனை தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us