மத்திய அரசைக் கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 08, 2011 05:38 PM
நாகை: பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து நாகையில் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகை தலைமை தபால் நிலையம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.