/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனி இடஒதுக்கீடு கோரி பேரணி வன்னியர் ஒருங்கிணைப்பு தீர்மானம்தனி இடஒதுக்கீடு கோரி பேரணி வன்னியர் ஒருங்கிணைப்பு தீர்மானம்
தனி இடஒதுக்கீடு கோரி பேரணி வன்னியர் ஒருங்கிணைப்பு தீர்மானம்
தனி இடஒதுக்கீடு கோரி பேரணி வன்னியர் ஒருங்கிணைப்பு தீர்மானம்
தனி இடஒதுக்கீடு கோரி பேரணி வன்னியர் ஒருங்கிணைப்பு தீர்மானம்
ADDED : அக் 06, 2011 12:59 AM
புதுச்சேரி : பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க
வலியுறுத்தி கோரிக்கை பேரணி நடத்தப்படும் என்று வன்னியர் குடும்ப
ஒருங்கிணைப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வில்லியனூரில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு இயக்க செயற்குழு கூட்டம்
இயக்கத் தலைவர் துளசிதாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிர்வாகிகள்
ரகுபதி, பிரேம்குமார், குப்புசாமி, சண்முகம், ராஜேந்திரன், சாரதி ஆகியோர்
கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இந்திராநகர் தொகுதி இடைத் தேர்தல் மூலம் ஆட்சி
மாற்றம் ஏற்படும் என்ற கருத்து, மாநிலத்தில் தேர்தல் மூலம் புதிய ஆட்சியை
உருவாக்கிய மக்களுக்கு எதிரான கருத்தாகும். இடைத்தேர்தல் முடிந்த உடன்
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கோரிக்கையான தனி இட ஒதுக்கீடு,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பேரணி
நடத்தி அரசுக்கு மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


