Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

குரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

குரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

குரூப் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

ADDED : செப் 18, 2011 01:02 AM


Google News

கிருஷ்ணகிரி: அண்ணா மேலாண்மை நிலையம் சார்பில் நடத்தப்படும் குடிமைபணிகளுக்கான முதல் நிலை தேர்வுக்கான பயிற்சியில் சேர கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

மத்திய தேர்வாணயைகுழு நடத்தும் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு எழுத அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையமான அண்ணா மேலாண்மை நிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆகும். இதர வகுப்பினர் 30 வயதுக்குட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் 33 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.



விண்ணப்பதாரர் தேர்வு எழுத சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் சிவகங்கை ஆகிய மையங்களில் ஏதேனும் ஒரு மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

தகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது ஜாதி, இருப்பிட, வயதுக்கான ஆதாரம் மற்றும் பட்டப்படிப்பு சான்றுகளின் நகல்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்பித்து உரிய விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலகத்தில் வரும் 27ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us