/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வார்டு பிரச்னைகளுக்கு தீர்வு அப்துல் வஹாப் உறுதிவார்டு பிரச்னைகளுக்கு தீர்வு அப்துல் வஹாப் உறுதி
வார்டு பிரச்னைகளுக்கு தீர்வு அப்துல் வஹாப் உறுதி
வார்டு பிரச்னைகளுக்கு தீர்வு அப்துல் வஹாப் உறுதி
வார்டு பிரச்னைகளுக்கு தீர்வு அப்துல் வஹாப் உறுதி
ADDED : அக் 07, 2011 10:59 PM
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்ட பஞ்சாயத்து ஏழாவது வார்டில் எஸ்.டி.பி.ஐ., சார்பில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் வஹாப், கீழக்கரை அருகே கோகுலம் நகரில் மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அவர் கூறியதாவது:மாவட்ட ஊராட்சியில் எழாவது வார்டுக்கு உட்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். கிராமம் தோறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தி அதிகாரிகளின் உதவியுடன் உடனடியாக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன். அரசு நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்க முன் நின்று குரல் கொடுப்பேன்.தடையில்லா குடிநீர் கிடைக்க பாடுபடுவேன். மக்களின் குறைகளை கேட்க தனி அலுவலகம் அமைத்து ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் ஆலோசனையுடன் செயல்படுவேன், என்றார்.எஸ்.டி.பி.ஐ., மாவட்ட துணை தலைவர் வக்கீல் கருணாகரன், தொகுதி தலைவர் பைரோஸ்கான், நிர்வாகிகள் ஜமில், கார்மேகம்,இஸ்ஹாக்,சேகு பகுர்தீன், சுல்த்தான், அப்துல் ஹாபி உடன் சென்றனர்.


