Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அனைவருக்கும் இலவச பொருள் வழங்க கோரிக்கை

அனைவருக்கும் இலவச பொருள் வழங்க கோரிக்கை

அனைவருக்கும் இலவச பொருள் வழங்க கோரிக்கை

அனைவருக்கும் இலவச பொருள் வழங்க கோரிக்கை

ADDED : ஆக 28, 2011 12:50 AM


Google News
திருப்பூர் : ரேசன்கார்டு உள்ள அனைவருக்கும், அரசின் இலவச பொருட்களை வழங்க வேண்டும் என, மா.கம்யூ., கட்சி கிளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.திருப்பூர் காட்டுவலவு, மா.கம்யூ., கிளை மாநாடு செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.

தெற்கு மாநகர செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். கிளை செயலாளராக வேலா, இளங்கோ தேர்வு செய்யப்பட்டனர்.மாநகராட்சி வார்டு பிரிப்புகளில், எந்த நிர்பந்தமும் இல்லாமல்,சீரான முறையில் வார்டு எல்லைகளை உருவாக்க வேண்டும்; விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி பகுதிக்கு ஏற்ப, கூடுதல் துப்புரவு தொழிலாளர்களை நியமித்து, பொது சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இலவசமாக வழங்க உள்ள மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியை, ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும்; ஏராளமான மக்கள் வந்துசெல்லும் சந்தைப்பேட்டை, உழவர் சந்தை, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளில் உள்ள 'டாஸ்மாக்' மதுபான கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன





      Our Apps Available On




      Dinamalar

      Follow us