/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்டத்தில் நேற்று வரை 18 ஆயிரம் பேர் மனு தாக்கல்மாவட்டத்தில் நேற்று வரை 18 ஆயிரம் பேர் மனு தாக்கல்
மாவட்டத்தில் நேற்று வரை 18 ஆயிரம் பேர் மனு தாக்கல்
மாவட்டத்தில் நேற்று வரை 18 ஆயிரம் பேர் மனு தாக்கல்
மாவட்டத்தில் நேற்று வரை 18 ஆயிரம் பேர் மனு தாக்கல்
ADDED : செப் 27, 2011 11:38 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்றுவரை 18 ஆயிரத்து 147 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி வரும் 29ம் தேதி முடிகிறது.
மாவட்டம் முழுவதும் நேற்று முன் தினம் மற்றும் நேற்றும் அமாவாசை என்பதால் அதிக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.நேற்று வரை மாவட்டம் முழுவதும் உள்ள 47 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 86 பேரும், 473 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 964 பேரும், 1,099 ஊராட்சி தலைவர் பதவிக்கு 3,130 பேரும், 8,247 வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 ஆயிரத்து 234 பேரும், 3 நகராட்சி தலைவர் பதவிக்கு 9 பேரும், 96 நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 196 பேரும், 15 பேரூராட்சி தலைவர் பதவிக்கு 46 பேரும் மற்றும் 243 பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு 482 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 223 உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று வரை 18 ஆயிரத்து 147 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.நாளை கடைசி நாள் என்பதால் காங்., பா.ம. க., உள்ளிட்ட கட்சிகள் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


