/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஹசாரேவுக்கு ஆதரவாக கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதம்ஹசாரேவுக்கு ஆதரவாக கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதம்
ஹசாரேவுக்கு ஆதரவாக கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதம்
ஹசாரேவுக்கு ஆதரவாக கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதம்
ஹசாரேவுக்கு ஆதரவாக கருமத்தம்பட்டியில் உண்ணாவிரதம்
ADDED : ஆக 25, 2011 11:28 PM
சூலூர் :அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, கருமத்தம்பட்டியில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், நொய்யல் பசுமைக்கழகத்தினர், தொழில் அமைப் பினர், பள்ளி, கல்லூரி மாணவியர், இளை ஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நொய்யல் பசுமைக் கழகத்தின் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை பார்க் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் அனுஷா துவக்கி வைத்தார். நொய்யல் பசுமைக் கழகத் தலைவர் பழனிசாமி வரவேற்று பேசுகையில்,'காடுகளில் உள்ள மரங்களை அழிப்பதும், மெகா ஊழல் செய்வதும் நமது நாட்டில் அதிகரித்து வருகின்றன. நாட் டின் உயர்ந்த பண்பாடு மறைந்து, தனிமனிதனின் ஆடம்பர வாழ்க்கையால் ஊழல் அதிகரித்து, நாட்டுக்கு தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது,' என்றார். சுற்றுச்சூழல் ஆர்வலர் யோகநாதன் பேசுகையில்,' ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு, நாடு முழுக்க குவிந்து வருகிறது. மக்களின் மனதில், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எழுச்சி உண்டாகி உள்ளது. 'மக்கள் சக்தி வெல்லும்' என்பதில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து போராட வேண்டும்,' என்றார். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில்,' அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். ஊழலை ஒழிப்பதில் எங்களின் கருத்துகளையும் பதிவு செய்யும் வாய்ப்பாக இதை கருதுகிறோம். ஊழல் ஒழிப்பில் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக உள்ள, ஹசாரேவின் போராட்டத்துக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு,' என்றனர். உண்ணாவிரதத்தில் அறங்காவலர்கள் செல்வம், சேதுராமசாமி, லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியம், முருகசாமி, டாக்டர் ரஜினிகாந்த் மற்றும் பார்க் கல்லூரி, டி.சி.இ., கல்லூரி மாணவ, மாணவியர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். துணை செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்தார்.