மயக்க மருந்தியல் நிபுணர்கள் மாநாடு
மயக்க மருந்தியல் நிபுணர்கள் மாநாடு
மயக்க மருந்தியல் நிபுணர்கள் மாநாடு
ADDED : செப் 06, 2011 10:15 AM
சென்னை: இந்திய மயக்க மருந்தியல் நிபுணர்கள் கூட்டமைப்பின் சார்பாக, கண் மருத்துவக் குழுவின் சர்வதேச முதல் மாநாடு சென்னையில் நடந்தது.
நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் நடந்த மாநாட்டில், சங்கர நேத்ராலயாவின் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். பின்னர், மாநாட்டு மலரை ராணுவ மருத்துவமனை கமாண்டென்ட் காமத் வெளியிட, பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். விழாவில், கிரிஸ் டாட்ஸ் (இங்கிலாந்து), சந்திரா குமார் (சிங்கப்பூர்), எஸ்ஸாட் அஜீஸ் (எகிப்து), ஒயா யாலின் (இங்கிலாந்து), பிலிப் கைஸ் (நியூசிலாந்து), ஷாவிவ் ஓக்ரா (இங்கிலாந்து), இந்து மோகினி சென், சர்மா, (இந்தியா) ஆகிய மருத்துவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். மயக்க மருந்தியல் தொடர்பாக, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடந்த வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கப்பட்டது.


