/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/காங்., வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம் : காங்., பார்வையாளர் கெரோகாங்., வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம் : காங்., பார்வையாளர் கெரோ
காங்., வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம் : காங்., பார்வையாளர் கெரோ
காங்., வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம் : காங்., பார்வையாளர் கெரோ
காங்., வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம் : காங்., பார்வையாளர் கெரோ
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்திற்கென காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை மாற்றியதாக கூறி சென்னையில் இருந்து படிவம் 'பி' கொண்டு வந்த காங்., பார்வையாளரை கெரோ செய்து, அறையில் பூட்டிவைத்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் காங்., கட்சியின் மாநில தலைமையிடம் இருந்து பட்டியல் வெளியிடப்படும் முன் பல இடங்களிலும் கவுன்சிலர் பதவிக்கு போட்டயிட விரும்பிய கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் காங்., கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்த்து காத்து இருந்தனர். குமரி மாவட்டத்தில், 11 மாவட்ட பஞ்., கவுன்சிலர் பதவி, 111 பஞ்., யூனியன் கவுன்சிலர் பதவியும், 95 பஞ்., தலைவர், மற்றும் 984 வார்டு கவுன்சிலர் 984 பதவி, உள்ளிட்ட 2 ஆயிரத்து 275 பதவிகள் உள்ள நிலையில் 11 பதவிக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்., கட்சியினர் எதுவும் செய்யமுடியாத நிலையில் திக்குமுக்காடி போயினர்.
இதில் மாவட்ட தலைவர் ராபர்ட்புரூசிடம் ரொம்பவும் நெருக்கமான டாக்டர் ஆல்பர்மதியரசு, தனது மனைவி மெஜெல்லா பெயர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் இல்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தார். அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் உடனடியாக குமரி கிழக்கு மாவட்ட அலுவலகம் சென்றனர். அங்கு சென்று அலுவலகத்தை பூட்டினர். நேற்று காலை அங்கு வந்த தலைவர் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஐரின்சேகர் நேற்று மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து மஜெல்லாவும் போட்டி காங்., வேட்பாளராக மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை மாநில தலைமையில் இருந்து காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு தேர்தலில் படிவம் பியுடன் மாநில தலைமை அறிவித்த பட்டியலுடன் தேர்தல் பார்வையாளர் முன்னாள் எம்.எல்.ஏ., செல்லகுமார் நாகர்கோவில் வந்தார். அவரை காங்., நிர்வாகிகள் சந்திந்து பி.படிவம் வாங்கி கொண்டு சென்றனர். அப்போது திடீரென முன்னாள் இளைஞர் காங்., தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் ஏராளமானோர் செல்லகுமார் தங்கிஇருந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் செல்லகுமாரை ஆவேசமாக திட்டினர். இதனையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட முயன்றார். ஆனால் அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்து அறைக்குள் அடைத்து வைத்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ.,கள் பிரின்ஸ், ஜாண்ஜேக்கப் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்களுடன் செல்லகுமார் வெளியேற முயன்றபோது, அவரை முற்றுகையிட்டு எங்கள் பிரச்னைக்கு தீர்வு கூறிவிட்டு செல்லுங்கள் என கூறி, மூன்று பேரையும் விடாமல் பேசிகொண்டு இருந்தனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் காங்., தொண்டர்கள் கூடினர். செல்லகுமார் ஆதரவாளர்களுக்கும், ராஜேஷ்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இரு பிரிவினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இதில் நான்குபேர் காயம் அடைந்தனர். தகவலறிந்த விஜயதரணி எம்.எல்.ஏ., அங்கு வந்தார். அவர் ராஜேஷ்குமார் ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் கன்னியாகுமரி பார்லி தொகுதி இளைஞர் காங்., தலைவர் குமார் கூறியதாவது;- காங்., சார்பில் போட்டியிட பி.படிவம் கொடுக்க மாநில தலைமை முன்னாள் எம்.எல்.ஏ., செல்லகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜா என்னிடம் தொலைபேசியில் முன்னாள் இளைஞர் காங்., தலைவர் ராஜேஷ்குமாருக்கு கிள்ளியூர் பஞ்., யூனியன் மாவட்ட பஞ்., உறுப்பினர் வார்டு 6க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவரிடம் படிவம் பி. பெற்று தேர்தலில் போட்டியிட கூறினார். இதனையடுத்து நாங்கள் நேற்று மாலை செல்லகுமாரிடம் படிவம்,பி. கேட்டபோது, அது ஜேக்கப்சதா என்பவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள், அவரை கண்டித்தோம் இதனால் அவர் தனது ஆதரவாளர்களை கொண்டு எங்களை தாக்கியதில் நான்குபேர் காயம் அடைந்துள்ளோம். மேலும் மேற்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ், தொகுதி எம்.எல்.ஏ., ஜாண்ஜேக்கப் ஆகியோர் கூறியபிறகும் அவர் செவி சாய்க்கவில்லை. இதனால் இளைஞர் காங்., தேர்தலில் எவருக்கும் ஆதரவு தெரிவிக்காது. காங்., கட்சியினருக்கும் ஆதரவாக தேர்தலில் ஓட்டு சேகரிக்கமாட்டோம். தேர்தலில் போட்டியிடமாட்டோம். இவ்வாறு குமார்கூறினார். காங்., தொண்டர்கள் மாறி மாறி தாக்கியதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.