/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்நெல்லை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
நெல்லை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
நெல்லை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
நெல்லை மேற்கு மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
ADDED : ஆக 09, 2011 02:29 AM
தென்காசி : நெல்லை மேற்கு மாவட்ட தே.மு.தி.க.புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:''நெல்லை மேற்கு மாவட்ட தே.மு.தி.க.,ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி தென்காசி ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த லட்சுமணன் விடுவிக்கப்பட்டு மாவட்ட இளைஞரணி துணை செயலாளராக செயல்பட்டு வரும் காமராஜ் ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.கடையநல்லூர் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த குமார் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக செந்தில்குமார் ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வந்த கருப்பசாமி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சோலை கனகராஜ் ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.சங்கரன்கோவில் நகர செயலாளராக செயல்பட்டு வந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டைட்டஸ் ஆதித்தன் நகர பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அமைப்புகளின் அனைத்து பிரிவு அணிகளின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.


