/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஒரு போன் செய்தால் போதும் வீடு தேடி வந்து குறைகள் தீர்ப்பேன் : 17வது வார்டு ராஜலட்சுமிஒரு போன் செய்தால் போதும் வீடு தேடி வந்து குறைகள் தீர்ப்பேன் : 17வது வார்டு ராஜலட்சுமி
ஒரு போன் செய்தால் போதும் வீடு தேடி வந்து குறைகள் தீர்ப்பேன் : 17வது வார்டு ராஜலட்சுமி
ஒரு போன் செய்தால் போதும் வீடு தேடி வந்து குறைகள் தீர்ப்பேன் : 17வது வார்டு ராஜலட்சுமி
ஒரு போன் செய்தால் போதும் வீடு தேடி வந்து குறைகள் தீர்ப்பேன் : 17வது வார்டு ராஜலட்சுமி
ADDED : செப் 30, 2011 01:16 AM
காரைக்குடி : காரைக்குடி 17வது வார்டு கவுன்சிலருக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் பி.ராஜலட்சுமி பன்னீர்செல்வம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் கூறுகையில், ''எனது வார்டில் ரோடு, குடிநீர், கழிவு நீர் கால்வாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அடிப்படை வசதி குறைவாக இருக்கும் பட்சத்தில் மன்ற கூட்டத்தில் முறையிட்டு முறையிட்டு அதற்கு தீர்வு காண்பேன். மக்கள் எந்த நேரமும் என்னை அணுகி, குறைகளை தெரிவிக்கலாம். அரசு திட்டங்கள் முறையாக கிடைக்க பாடுபடுவேன். சுகாதாரம் பேணி காக்கும் வகையில் தெரு முழுவதும் குப்பை தொட்டி அமைத்து, கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுப்பேன். ஒரு போன் செய்தால் போதும், வீடு தேடி வந்து குறைகளை நிவர்த்தி செய்வேன். மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி எனது வார்டை முன்மாதிரியாக மாற்ற அயராது பாடுபடுவேன்'', என்றார்.