ADDED : ஆக 26, 2011 12:09 AM
கிள்ளை : சிதம்பரம் அருகே சி.முட்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது.
தனிஅலுவலர் ராஜதுரை தலைமை தாங்கினார். செயலர் சேகர் வரவேற்றார். கூட்டத்தில் சி.முட்லூர், அ.மண்டபம், மேல் அனுவம்பட்டு, கீழ் அனுவம்பட்டு, அம்புபூட்டியபாளையம், லால்புரம், தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து 106 உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் பங்கேற்றனர். ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் செயல்படுத்த உள்ள பணிகள் குறித்த தீர்மானங்கள் முன் மொழியப்பட்டது.


