ADDED : ஆக 28, 2011 04:58 PM
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஐரீன் சூறாவளிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
நியூயார்க்கில் வீடு மீது மரம் விழுந்ததில் 11 வயது சிறுவன் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. விர்ஜீனியா மாகாணத்தில் ஒருவரும், வடக்கு கரோலினாவில் 4 பேரும் பலியானார்கள். ஐரீன் சூறாவளி காரணமாக வாஷிங்டன், நியூயார்க், போஸ்டன் ஆகிய நகரங்களில் 65 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


