/உள்ளூர் செய்திகள்/தேனி/பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்புபிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஆக 18, 2011 09:27 PM
ஆண்டிபட்டி:பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளால் வேலப்பர் கோயில்
வளாகப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது.ஆண்டிபட்டியில் இருந்து 20
கி.மீ.,தொலைவில் உள்ளது வேலப்பர் கோயில். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள
இக்கோயிலில் மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் வற்றாத நீரூற்று
புனித நீராக கருதப்படுகிறது.வழிபாட்டுக்காக வரும் பக்தர்கள் தங்களுக்கு
தேவையான உணவுகளை பொட்டலங்களாக கொண்டு வருகின்றனர். அன்னதானம் நடத்துபவர்கள்
பிளாஸ்டிக் டம்ளர்களை பயன்படுத்தி ஆங்காங்கே தூக்கி எறிந்து
செல்கின்றனர்.'குடி' மகன்கள் பல இடங்களில் காலிபாட்டில்கள், பிளாஸ்டிக்
கழிவுகளை அப்படியே போட்டு செல்கின்றனர்.
இந்த குப்பைகள் அனைத்தும் ஒன்று
சேர்ந்து தண்ணீர் செல்லும் ஓடைப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுத்தி
விடுகிறது. வனப்பகுதியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள
இக்கோயில் வளாகத்தில் கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் கோயிலுக்கு வரும்
பக்தர்கள் கொட்டும் கழிவுளால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. பிளாஸ்டிக்
பொருட்கள் பயன்படுத்தவும், கோயில் வளாகப்பகுதியில் மதுபானங்கள் கொண்டு
செல்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


