ADDED : அக் 08, 2011 10:58 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் தினேஷ்குமார் 49,51,56, 59 மற்றும் 60வது வார்டுகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.மங்கலம் ரோடு, தெற்குதோட்டம், பட்டுகோட்டையார் நகர், கோபால்நகர், செங்குந்தபுரம், செல்லம் நகர், முருகம்பாளையம் ரோடு, புவனேஸ்வரி நகர், இடும்பன் நகர்,குளத்துப்புதூர், சின்னாண்டிபாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
'மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பொது கழிப்பிடம் சீரான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தரமான தார்ரோடு, மண்டலம் வாரியாக பூங்காக்கள், இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிலையங்கள் மைக்கப்படும் என கூறி,' தினேஷ்குமார் தே.மு.தி.க.,வுக்கு ஆதரவு கேட்டு ஓட்டு சேகரித்தார்.


