Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

கோவையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

கோவையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

கோவையில் மருத்துவ மாணவர்கள் போராட்டம்

ADDED : ஜூலை 28, 2011 10:05 PM


Google News
கோவை : அடிப்படை வசதி கேட்டும், மிரட்டும் விடுதி அலுவலர்களை கண்டித்தும் கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மருத்துவக்கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி 'டைடல் பார்க்' அமைக்கப்பட்டது. அப்போது, நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டடம் கட்டித்தரப்படும் எனக்கூறி மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சமாதானப்படுத்தியது. ஆனால், இதுவரை எவ்வித பணியும் மேற்கொள்ளவில்லை. இதை கண்டித்து, விடுதி மாணவர்கள் நேற்று காலை 7.30 மணிக்கு டீன் விமலாவின் காரை முற்றுகையிட்டனர். இதன் பின், வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மருத்துவ மாணவர்கள் கூறியதாவது: விடுதியில் அடிப்படை வசதி இல்லை. இரண்டு மாணவர்கள் தங்கும் அறையில் மூன்று மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் வசதி இல்லை. உணவு சரியில்லை. மாணவர்களை பார்க்க வரும் பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் அவமரியாதை செய்யப்படுகின்றனர். இதுபற்றி கேட்டால்,'தேர்வு எழுத முடியாது, எழுதினாலும் தேர்ச்சி பெற முடியாது' என மிரட்டல் விடுக்கின்றனர் என்றனர். இந்நிலையில், மாணவர்களுடன் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் காலை 10.30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us