ஆசிரியர்களுக்கு மாணவர்கள் குருவணக்கம்
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் குருவணக்கம்
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் குருவணக்கம்
ADDED : ஜூலை 27, 2011 10:55 AM
சென்னை: சென்னை காமராஜர் நினைவு அரங்கில் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிகளின் 54வது ஆண்டு விழா நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கு குரு வணக்கம் செலுத்துவதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது. பள்ளிகளின் டீன் ஒய்.ஜி.பார்த்தசாரதி தலைமையில் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் சுதா சேஷய்யன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அனைத்து நிலைகளிலும் இயற்கையே சிறந்த ஆசிரியர் என்ற தலைப்பில் அனைத்து பள்ளி மாணவர்களும் பாடல் பாடினர். அதைத் தொடர்ந்து குரு- சிஷ்ய பாரம்ரிய அடிப்படையிலான தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் சாதித்த சாதனைகள் விளக்கப்பட்டன. மாணவர்களின் நாட்டிய நாடகமும் நடைபெற்றது.