Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வங்கி ஊழியர் போல் நடித்து ஏமாற்றியவர் கைது

வங்கி ஊழியர் போல் நடித்து ஏமாற்றியவர் கைது

வங்கி ஊழியர் போல் நடித்து ஏமாற்றியவர் கைது

வங்கி ஊழியர் போல் நடித்து ஏமாற்றியவர் கைது

ADDED : ஆக 07, 2011 12:56 AM


Google News

சென்னை : சில்லரை தருவதாக, வங்கி ஊழியர் போல் நடித்து, மளிகை கடைக்காரரின் பணத்தை மோசடி செய்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ், 46; இதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு அருகில், ஸ்டேட் வங்கி உள்ளது.இந்த வங்கியில், தினசரி ரூபாய் நோட்டுகளை கொடுத்து, சில்லரை மாற்றுவது சிவராஜின் வழக்கம். இவ்வாறு பணம் மாற்றுவதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், நேற்று முன்தினம், வங்கியில் இருந்து அழைத்தது போல், சிவராஜை போனில் அழைத்து, வங்கியில் தற்போது சில்லரை உள்ளதாகவும், உடனே வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.இதை நம்பிய சிவராஜ், கடையில் பணியாற்றும் நபரிடம் 8,000 ரூபாய் பணத்தை கொடுத்தனுப்பி, வங்கியில் சென்று சில்லரை வாங்கி வருமாறு கூறினார். பணத்துடன், கடையில் வேலை செய்பவர் வங்கிக்கு சென்ற போது, வங்கி வாயிலில் நின்ற நபர், ஒரு பையில் சில்லரை இருப்பதாக கொடுத்து விட்டு, பணத்தை வாங்கிக் கொண்டு, வங்கிக்குள் செல்வது போல் நடித்து விட்டு வெளியில் சென்றுவிட்டார்.சில்லரை இருப்பதாக கூறப்பட்ட பையை, கடைக்குள் கொண்டு வந்து திறந்து பார்த்தபோது, அதில், சில்லரைக்கு பதில் கற்கள் இருந்தன. இதையடுத்து, ஏழுகிணறு போலீசில் சிவராஜ் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நபரை தேடி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us