/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கேசரி ஆப்பிள் வரத்து ஈரோட்டில் அதிகரிப்புகேசரி ஆப்பிள் வரத்து ஈரோட்டில் அதிகரிப்பு
கேசரி ஆப்பிள் வரத்து ஈரோட்டில் அதிகரிப்பு
கேசரி ஆப்பிள் வரத்து ஈரோட்டில் அதிகரிப்பு
கேசரி ஆப்பிள் வரத்து ஈரோட்டில் அதிகரிப்பு
ADDED : ஆக 04, 2011 02:17 AM
ஈரோடு: சீஸன் துவங்கியுள்ளதால் பெங்களூருவில் இருந்து அதிகளவு கேசரி
ஆப்பிள் பழம் ஈரோட்டுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.பெரும்பாலும் காஷ்மீர்,
சிம்லா போன்ற பகுதிகளில்தான் அதிகமாக ஆப்பிள் விளைச்சலாகிறது. நாளடைவில்
பெங்களூரு, கேரளா போன்ற பகுதியிலும் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
காட்டி வருகின்றனர். சிறிய ஆப்பிள் ரகங்களான 'கேசரி' ஆப்பிள் அதிக
இனிப்புத் தன்மை கொண்டது. சிறியவர்கள் முதல் பெறியவர்கள் விரும்பி
சாப்பிடுகின்றனர்.
பெங்களூருவில் பயிராகும், 'கேசரி' ஆப்பிள் பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது.
அங்கிருந்து தினசரி இரண்டு முதல் மூன்று லாரிகள் வரை ஈரோட்டுக்கு கொண்டு
வரப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் வரத்து அதிகரிக்கும் என, வியாபாரிகள்
நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை
செய்யப்படுகிறது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்கிச் செல்லும் சில்லரை
வியாபாரிகள் தள்ளு வண்டிகளிலும், முக்கிய இடங்களில் வைத்து அவற்றை விற்பனை
செய்கின்றனர்.
வடமாநிலங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆப்பிள் பழம் வரும்பட்சத்தில், இவற்றின் விலை சரிய வாய்ப்புள்ளது.


