/உள்ளூர் செய்திகள்/தேனி/சுகாதாரமான குடிநீர், ரோடு, அடிப்படை வசதி செய்து தரப்படும்சுகாதாரமான குடிநீர், ரோடு, அடிப்படை வசதி செய்து தரப்படும்
சுகாதாரமான குடிநீர், ரோடு, அடிப்படை வசதி செய்து தரப்படும்
சுகாதாரமான குடிநீர், ரோடு, அடிப்படை வசதி செய்து தரப்படும்
சுகாதாரமான குடிநீர், ரோடு, அடிப்படை வசதி செய்து தரப்படும்
ADDED : அக் 07, 2011 10:45 PM
வருஷநாடு : சுகாதாரமான குடிநீர், ரோடு, அடிப்படை வசதி ஏற்படுத்திக் தரப்படும் என தும்மக்குண்டு ஊராட்சி தலைவர்வேட்பாளர் சடையன் கூறினார்.
அவர் கூறியதாவது:- தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட வாலிப்பாறை, தும்மக்குண்டு, காந்திக்கிராமம், முத்துநகர், அஞ்சரபுலி, வண்டியூர், வீரசின்னம்மாள்புரம், முத்துராஜாபுரம், சத்தியாநகர், கோடாலியூத்து, அண்ணாநகர்,சின்னாநகர், தண்டியக்குளம், உருட்டிமேடு, மணலாத்துக்குடிசை,காமராஜபுரம், ராமசாமி நகர், இந்திராநகர்,மேல்வாலிப்பாறை ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் திட்டத்தினை நவீனப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையில்லாமல் வழங்கப்படும்.இந்த கிராமங்களுக்கு தார் ரோடுவசதி,பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க முயற்சி செய்வேன். தெருவிளக்குகள்,கழிப்பறை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். வண்டியூர், வீரசின்னம்மாள்புரத்திற்கு வைகை ஆற்றில் புதிய பாலம் கட்டிகொடுத்து தார்ரோடு வசதி ஏற்படுத்திக்கொடுக்க முழுமையான முயற்சி எடுப்பேன்.அரசு கொடுக்க கூடிய இலவச திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கிடைக்க பாடுபடுவேன். 10 நாட்களுக்கு ஒரு முறை கிராமங்களுக்கு சென்று மக்கள் குறைகளை கேட்டு வரக்கூடிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


