ADDED : செப் 06, 2011 10:25 PM
கடலூர் : மனைவியைத் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன், 28. இவரது மனைவி புவனேஸ்வரி, 25. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக புவனேஸ்வரி வன்னியர்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் புவனேஸ்வரியை தனது வீட்டிற்கு வருமாறு சீனுவாசன் அழைத்தார். வரமறுத்த புவனேஸ்வரியை சீனுவாசன் தாக்கினார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து சீனுவாசனை கைது செய்தனர்.


