/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏற்காடு மலை பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்புஏற்காடு மலை பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
ஏற்காடு மலை பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
ஏற்காடு மலை பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
ஏற்காடு மலை பகுதியில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
ADDED : செப் 16, 2011 01:38 AM
ஏற்காடு: ஏற்காடு, காசக்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(16).
கடந்த செப்டம்பர் 5 ம் தேதி, ஏற்காடு மலைப்பகுதியில், புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியை கண்டெடுத்துள்ளார். அவரது மார்பு பக்கம் திருப்பிய நிலையில், துப்பாக்கியை இயக்கியுள்ளார். அப்போது, தோட்டாக்கள் பாய்ந்து படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மலைப்பகுதியில் நக்ஸலைட் அல்லது வன விலங்குகளை வேட்டையாடும் நபர்களின் நடமாட்டம் இருக்கிறதா என்று, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


