ADDED : ஜூலை 14, 2011 12:34 AM
குளித்தலை: வாத்தை விற்பனைக்கு தர மறுத்தவரை அடித்துக் கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை குளித்தலை போலீஸார் கைது செய்தனர்.
குளித்தலை அருகே எழுநூற்றுமங்கலத்தை சேர்ந்தவர் பெரியசாமி (60). இவர் மணப்பாறை - குளித்தலை நெடுஞ்சாலையில் வாலாந்தூர் பிரிவுச்சாலை அருகே வாத்து பட்டிப்போட்டு வளர்த்து வருகிறார். கோட்டமேடுச்சேர்ந்த மலையாளன் மகன் மணிகண்டன் (27), புதுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் பங்காரு மகன் சிவா (23), ரவி மகன் பிரபாகரன் (27) ஆகியோர் வாத்து விலைக்கு வேண்டும் என கேட்டுள்ளனர். வாத்தை விற்பனைக்கு இல்லை, வளர்ப்பதற்கு மட்டுமே உள்ளது என பெரியசாமி கூறியுள்ளார். வாத்து விற்பனைக்கு தர மறுத்ததால் மணிகண்டன், சிவா, பிரபாகரன் ஆகியோர் பெரியசாமியை குச்சியால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பலத்த காயமடைந்த பெரியசாமி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரியசாமி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், சிவா, பிரபாகரன் ஆகியோரை கைது செய்தனர்.


