அ.தி.மு.க.,வில் 95 பேர் விருப்ப மனு
அ.தி.மு.க.,வில் 95 பேர் விருப்ப மனு
அ.தி.மு.க.,வில் 95 பேர் விருப்ப மனு
ADDED : செப் 03, 2011 02:57 AM
மதுரை : உள்ளாட்சி தேர்தலில், மதுரை மாநகராட்சியில் அ.தி.முக., சார்பில் போட்டியிட 95 பேர் விருப்பமனுத்தாக்கல் செய்தனர்.
அமைச்சர் செல்லூர் ராஜூ, நகர் செயலாளர் போஸ் விண்ணப்பங்களை பெற்றனர். கவுன்சிலர் வேட்பாளருக்கு 95 பேர் மனு செய்தனர். மேயர் வேட்பாளர் ஒதுக்கீடு யாருக்கு? என்ற குழப்பம் நிலவுவதால், யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இருவர் மட்டும் மனுக்கள் வாங்கினர். செப்.,8 வரை அவகாசம் இருப்பதால், விருப்பமனு தாக்கல் சொய்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


