/உள்ளூர் செய்திகள்/சேலம்/"கோல்டு காய்ன்' திட்டத்தில் மோசடி ஏமாந்த பொதுமக்கள் போலீஸில் புகார்"கோல்டு காய்ன்' திட்டத்தில் மோசடி ஏமாந்த பொதுமக்கள் போலீஸில் புகார்
"கோல்டு காய்ன்' திட்டத்தில் மோசடி ஏமாந்த பொதுமக்கள் போலீஸில் புகார்
"கோல்டு காய்ன்' திட்டத்தில் மோசடி ஏமாந்த பொதுமக்கள் போலீஸில் புகார்
"கோல்டு காய்ன்' திட்டத்தில் மோசடி ஏமாந்த பொதுமக்கள் போலீஸில் புகார்
ADDED : ஆக 13, 2011 12:51 AM
தம்மம்பட்டி:ஆத்தூர் மற்றும் தம்மம்பட்டி பகுதியில், 'கோல்டு காய்ன்'
திட்டத்தில் முதிர்வு காலம் முடிந்தும், பணம் கட்டியவர்களுக்கு, 'கோல்டு
காய்ன்' வழங்காமல் மோசடி செய்த சம்பவம், பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.ஆத்தூர், தம்மம்பட்டி, கொண்டையம்பள்ளி 3வது வார்டு
உள்ளிட்ட பகுதியில், ஆத்துரை காமராஜர் ரோட்டில் உள்ள 'எம்.ஆர்., கோல்டு
ஏஜன்ஸீஸ்' மூலம் கோல்டு காய்ன் கூப்பன், வெள்ளி கூப்பன், எலக்ட்ரானிக்
கூப்பன், நோக்கியா மொபைல் ஃபோன் கூப்பன், துணிக்கடை கூப்பன், உட்டன்
பர்னிச்சர் கூப்பன், பெட்ரோல் கூப்பன், வாட்சி கூப்பன் மற்றும் மளிகை
பொருட்கள் கூப்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில், பொதுமக்களிடம் அறிமுகம்
செய்ததோடு, திட்டத்துக்கான தொகையும் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.அதை
நம்பிய பொதுமக்கள், கோல்டு காய்ன் திட்டத்தில், 1,900 ரூபாய் முதலீடு
தொகையாகவும், உறுப்பினர் கட்டணமாக, 200 ரூபாய் சேர்த்து, 2,100 ரூபாய்
கட்டியுள்ளனர். அதில், 1,900 ரூபாய் செலுத்தியவர்களுக்கு, 70 நாட்கள்
கழித்து, 3,850 ரூபாய் ரொக்கப் பணம் அல்லது இரண்டு கிராம் தங்க காசு பெற
கூடுதலாக, 500 ரூபாய் கொடுத்தால் தருவதாக தெரிவித்துள்ளனர்.
அதை நம்பிய
கொண்டையம்பள்ளியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கேல்டு காய்ன்
திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டியுள்ளனர். இந்நிலையில், கடந்த மே மாதம்
உறுப்பினர்களாக சேர்ந்தவருக்கு முதிர்வு காலம் முடிந்தும், கோல்டு காய்ன்,
ரொக்க பணம் வழங்காமல், சம்மந்தபட்ட ஏஜென்சி நடத்துபவர்கள் காலதாமதம் செய்து
வந்துள்ளனர்.
அதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சம்மந்தப்பட்ட ஆத்தூர் எம்.ஆர்.,
கோல்டு ஏஜன்ஸீக்கு சென்று பார்த்தபோது, கடையை பூட்டிவிட்டு 'எஸ்கேப்' ஆனது
தெரியவந்துள்ளது.இதுகுறித்து கொண்டையம்பள்ளியை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட
நபர்கள், ஆத்தூர் டி.எஸ்.பி., மாணிக்கத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில், சேமிப்பு திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது
குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


