Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பெண்ணிடம் ஆபாச பேச்சு: வாலிபர் கைது

பெண்ணிடம் ஆபாச பேச்சு: வாலிபர் கைது

பெண்ணிடம் ஆபாச பேச்சு: வாலிபர் கைது

பெண்ணிடம் ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ADDED : செப் 03, 2011 12:19 AM


Google News

கிருஷ்ணகிரி: பர்கூரில் மொபைல்ஃபோனில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

பர்கூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் டிரைவர் குப்புசாமி. இவரது மனைவி ஈஸ்வரி (30). கடந்த திங்கட்கிழமை ஈஸ்வரி வைத்திருந்த மொபைல்ஃபோனுக்கு அழைப்பு வந்தது. அப்போது, மறு முனையில் ஒருவர் பேசினார். அவர் யார் என தெரியாத நிலையில் 'ராங் நெம்பர்' என கூறி ஈஸ்வரி ஃபோனை வைத்துள்ளார். அப்போதிருந்து ஈஸ்வரி வைத்திருந்த ஃபோனில் அடிக்கடி அந்த மர்ம நபர் தொடர்பு கொண்ட ஆபாசமாக பேசி வந்தார்.



நேற்று காலை இதே போன்று அழைப்பு வந்ததும் அவரிடம் நைசாக பேசிய ஈஸ்வரி தான் பர்கூர் பஸ் ஸ்டாண்டுக்கு வருவதாவும் அங்கு வந்து நேரில் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் பர்கூர் பஸ் ஸடாண்டுக்கு வந்த ஈஸ்வரி அங்கு தனக்காக காத்திருந்த வாலிபருக்கு ஃபோன் செய்து அவரை அடையாளம் கண்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் வாலிபரை பிடித்து பர்கூர் போலீஸில் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி அடுத்த கே. பூசாரிப்பட்டியை சேர்ந்த லாரி டிரவைர் சண்முகம் (28) என்பதும் ஏதாவது ஒரு நெம்பரை டயல் செய்து பெண்கள் பேசினால் அவர்களிடத்தில் ஆபாசமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பது தெரியவந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us