/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஒரே நாளில் 47 பவுன் கொள்ளை கைவரிசை : "பீதி'யில் திருச்சி மாவட்ட மக்கள்ஒரே நாளில் 47 பவுன் கொள்ளை கைவரிசை : "பீதி'யில் திருச்சி மாவட்ட மக்கள்
ஒரே நாளில் 47 பவுன் கொள்ளை கைவரிசை : "பீதி'யில் திருச்சி மாவட்ட மக்கள்
ஒரே நாளில் 47 பவுன் கொள்ளை கைவரிசை : "பீதி'யில் திருச்சி மாவட்ட மக்கள்
ஒரே நாளில் 47 பவுன் கொள்ளை கைவரிசை : "பீதி'யில் திருச்சி மாவட்ட மக்கள்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், வி.ஏ.ஓ., வங்கி துணைப் பொதுமேலாளர், மொபைல் ஃபோன் கடை உரிமையாளர் என, மூன்று வீடுகளில் நடந்த துணிகர திருட்டில், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 47 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை ராஜாராம் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 27 பவுன் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பூஜையறையில் இருந்த ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜாராம் போலீஸில் புகார் அளித்தார். ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் லலிதா, இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளை: ராஜாராம் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் விஜயகுமார். திருச்சி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் துணை பொதுமேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். ராஜாராம் வீட்டில் கைவரிசை காட்டிய அதே ஆசாமிகள், விஜயகுமாரின் வீட்டுக் கதவையும் உடைத்து கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் விபரம் உடனடியாக தெரியவில்லை. ஆந்திராவில் உள்ள விஜயகுமாரை, போலீஸார் தொடர்புக் கொண்டபோது, 'பீரோவில் 10 பவுன் நகைகள் இருந்ததாக' தெரிவித்துள்ளார். விஜயகுமார் வீட்டுக்கு திரும்பிய உடன்தான் கொள்ளை போன பொருட்கள் குறித்து முழுமையாக தெரியவரும்.
டவுசர் கொள்ளையர் அட்டகாசம்: மணப்பாறை, வடுகப்பட்டி பொய்கை திருநகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அரசு ஊழியர் குடியிருப்பில் வசிப்பவர் மனோகரன் (57). பண்ணப்பட்டியில் வி.ஏ.ஓ.,வாக இருக்கிறார். இவரது மனைவி மல்லிகா, மணப்பாறை நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். இவர்களது மகள் மாலதி, தலைப்பிரசவத்துக்காக வீட்டுக்கு வந்திருந்தார். சென்னையில் பணிபுரியும் மகன் மகேந்திரன், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். அவருடன் பேசிக் கொண்டிருந்ததால், முன்பக்க கதவை பூட்ட மறந்துவிட்டனர். மகேந்திரன் தனியறையில் படுத்திருக்க, மற்ற மூவரும் முன் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2.10 மணியளவில், டவுசர் மட்டும் அணிந்திருந்த மூன்று கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். முகத்தை முண்டாசால் மூடியிருந்த அவர்களின் கையில் அரிவாள் இருந்தது. இவர்களை கண்டு மாலா கூச்சலிட்டார். மூவரையும் அரிவாள் காட்டி மிரட்டிய டவுசர் கொள்ளையர், மாலா கழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலிச்செயினையும், மூன்று பவுன் செயினையும் பறித்தனர்.
மல்லிகா கழுத்தில் இருந்த ஐந்து பவுன் செயினை பறிக்க முயன்றனர். கொள்ளையர்களுடன் மல்லிகா போராடியதால் செயின் அறுந்து கீழே விழுந்தது. மூவரின் சத்தத்தினால் கொள்ளையர் தப்பியோடி விட்டனர். இருதய நோயாளியான மனோகரன், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். திருச்சி டி.ஜ.ஜி., அமல்ராஜ், மணப்பாறை டி.எஸ்.பி., தொல்காப்பியன், இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ஜாக் வரவழைக்கப்பட்டது.
ஏட்டு வீட்டில் கொள்ளை முயற்சி: வி.ஏ.ஓ., மனோகரன் வீட்டுக்கு அருகில் வசிப்பவர் ராமராஜ். வையம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக இருக்கிறார். மனோகரன் வீட்டில் கொள்ளையடிப்பதுக்கு முன் கொள்ளையர், இவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ராமராஜ் கதவை திறந்து பார்த்தபோது, யாரையும் காணவில்லை. அப்போது, 'மூன்று பேர் ஓடியதாகவும், ஜன்னல் வழியாக தான் பார்த்ததாகவும்' ராமராஜ் மகள் அவரிடம் கூறினார். அடுத்த சில நிமிடங்களில் மனோகரன் வீட்டில் கொள்ளையர் கைவரிசைக் காட்டியது குறிப்பிடத்தக்கது.


