Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சேரன்மகாதேவி கோயில் ஆய்வாளர் மீது கலெக்டரிடம் மக்கள் புகார்

சேரன்மகாதேவி கோயில் ஆய்வாளர் மீது கலெக்டரிடம் மக்கள் புகார்

சேரன்மகாதேவி கோயில் ஆய்வாளர் மீது கலெக்டரிடம் மக்கள் புகார்

சேரன்மகாதேவி கோயில் ஆய்வாளர் மீது கலெக்டரிடம் மக்கள் புகார்

ADDED : செப் 06, 2011 01:09 AM


Google News

திருநெல்வேலி : சேரன்மகாதேவி முத்தாரம்மன் கோயில் ஆய்வாளர் மீது கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

அம்பை வட்டம் சேரன்மகாதேவி முத்தாரம்மன் கோயில் முடுக்குத் தெரு மக்களுக்கு பாத்தியப்பட்டது. இதுபின்னர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. இதை எதிர்த்து அறநிலையத்துறை இணை ஆணையர் கோர்ட்டில் வழக்கு முறையீடு செய்யப்பட்டு அந்த மனு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அறநிலையத்துறையில் பணியாற்றிய கல்யாணசுந்தரம் என்பவர் ரூ.82 ஆயிரம் கையாடல் செய்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரின் தூண்டுதலால் தற்போதைய ஆய்வாளரும் செயல்பட்டு வருகிறார். கோயிலில் கட்டளை தாரர்களை பூஜை செய்யவிடாமல் தடுக்கிறார். கோயில் பூசாரியை பணிநீக்கம் செய்துவிட்டு, பணி செய்ய முடியாது எனக் கூறியவரை மீண்டும் பணிக்கு அமர்த்தியுள்ளார். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த விஷயத்தில் அறநிலையத்துறை இணை ஆணையர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us