/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்
அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்
அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்
அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்
ADDED : அக் 04, 2011 10:23 PM
காரைக்குடி:வார்டு மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன்
என, காரைக்குடி நகராட்சி 22வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஜெயமணி
தெரிவித்தார்.அவர் கூறியதாவது:முதல்வரின் ஆசி பெற்ற வேட்பாளராக களம்
இறங்கியுள்ள நான், காரைக்குடி 22 வார்டை முன் மாதிரி வார்டாக மாற்றுவேன்.
முழு சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ள வார்டாக மாற்றுவேன். நல்ல
குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வேன். வடிகால் வசதி, வார்டுகள் தோறும் சாலை
வசதிகள் மற்றும் சேர்வார் ஊரணியை சுத்தப்படுத்தி சுற்று சுவர் எழுப்புவேன்.
சேர்வார் ஊரணி மக்கள் எல்லோருக்கும் பட்டா வழங்க, மன்றத்தில் தீர்மானம்
வைத்து அனுமதி பெற்று பட்டா வாங்கிக் கொடுப்பேன். கொப்புடையம்மன் கோயிலை
சுற்றியுள்ள வணிகள் மற்றும் வியாரிபாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன். உலக
புகழ் பெற்ற செட்டிநாடு கலை பொருட்கள் வியாபாரிகளின் சாலைகள்
மேம்படுத்தப்படும். நான் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டால், அரசு
நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்கவும், மக்கள் பிரச்னைக்கு முன் நின்று
குரல் கொடுத்து, அதை தீர்த்து வைக்கவும் பாடுபடுவேன். விடுபட்ட பணிகளுக்கு
முக்கியத்துவம் கொடுத்து அப்பணியை விரைந்து முடிக்க பாடுபடுவேன். வார்டு
பிரச்னை எதுவாக இருந்தாலும் மக்கள் என்னை 24 மணி நேரமும் நேரிலோ, அல்லது
போனிலோ தொடர்பு கொள்ளலாம்'', என்றார்.


