Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அல்லிகண்மாய் சுடுகாடு குப்பை பிரச்னைக்கு நிரந்த தீர்வு தி.மு.க., வேட்பாளர் நாகநாதசேதுபதி வாக்குறுதி

அல்லிகண்மாய் சுடுகாடு குப்பை பிரச்னைக்கு நிரந்த தீர்வு தி.மு.க., வேட்பாளர் நாகநாதசேதுபதி வாக்குறுதி

அல்லிகண்மாய் சுடுகாடு குப்பை பிரச்னைக்கு நிரந்த தீர்வு தி.மு.க., வேட்பாளர் நாகநாதசேதுபதி வாக்குறுதி

அல்லிகண்மாய் சுடுகாடு குப்பை பிரச்னைக்கு நிரந்த தீர்வு தி.மு.க., வேட்பாளர் நாகநாதசேதுபதி வாக்குறுதி

ADDED : அக் 07, 2011 10:59 PM


Google News

ராமநாதபுரம் : ''ராமநாதபுரம் நகராட்சியில் அல்லிகண்மாய் சுடுகாட்டு குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன்'' என, தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் நாகநாதசேதுபதி பேசினார்.ராமநாதபுரம் எட்டாவது வார்டு தங்கப்பாநகரில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:ஆளும் அதிகார கர்வத்தில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நினைப்பில், மக்களின் கோரிக்கைகளை நிராகரிக்க துவங்கிவிட்டனர்.

பணத்தால் எதையும் சாதித்து விடுவோம் என்ற நினைப்பில் அ.தி.மு. க.,வினர் களத்தில் நிற்கின்றனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.ராமநாதபுரத்தில் 33 வார்டுகளிலும் காவிரி கூட்டுகுடிநீர் தடையின்றி கிடைக்க வழிசெய்வேன். வீட்டிற்கு இணைப்பு பெறமுடியாமல் உள்ள பகுதிகளில் தெரு குழாய் அமைத்து குடிநீர் தாகத்தை தணிப்பேன். தற்போதுள்ள பகுதிகள் மட்டுமின்றி நகரின் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் சோடியம், ஹைமாஸ் லைட் அமைத்து தருவேன். நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 'பார்க்கிங்' வசதி செய்து தரப்படும். புதிய பஸ் ஸ்டாண்ட், நவீன பஸ் ஸ்டாண்டாக மாற்றப்படும். விடுபட்ட தார்சாலை, சிமென்ட் சாலைகள் உடனடியாக அமைத்து தரப்படும். பிறப்பு சான்றிதழ் தடையின்றி கிடைக்க வழிசெய்வேன்.வரிவிதிப்பு பிரிவில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு, வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் நியாயமான வரிவிதிப்பு செய்ய நடவடிக்கை எடுப்பேன். சின்னக்கடை வீதியில் தேங்கும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். மழை காலங்களில் மழைநீர் ரோடுகளில் தேங்காமல் ஊரணிக்கு செல்லும் வகையில் திட்டம் தயாரிக்கப்படும்.அல்லிகண்மாய் சுடுகாட்டில் தேங்கும் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். நகரில் சமுதாயகூடம் அமைத்து தருவேன். மாதந்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தி மருத்துவ உதவிகள் வழங்கப்படும், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us